சிறப்பு பட்டிமன்றம்
சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு காரணம் - ஆண்களா ? பெண்களா ? கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் புனவாசிப்பட்டி அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்றம் 28/04/2019 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பட்டிமன்ற நடுவர் புனவை கவிஞர் திரு.பழனியப்பன் ஆசிரியர் ... ஆண்களே என்ற அணியில் திரு.செந்தில் ஆசிரியர் அவர்களும் மற்றும் திரு.மகேந்திரன் ஆசிரியர் அவர்களும் ... பெண்களே என்ற அணியில் பேராசிரியர் நித்யா அவர்களும் புதுமை விரும்பி இரா.கோபிநாதன் ஆசிரியர் அவர்களும் பேசினார். இந்நிகழ்ச்சியினை ஊர் நாட்டாமை N.M.தர்மராஜ் அவர்கள் தொடங்கி வைத்தார். ஊர் காரியக்காரர் திரு.நடேசன், ஊர் முக்கிய பிரமுகர்கள்திரு.வேலாயுதம் திரு.கருப்பாபிள்ளை மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியை காண திரளான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர் . விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர் .