Posts

ஒரே கல்லில் ஐந்து மாங்காய்கள்

Image
 ஒரே கல்லில் ஐந்து மாங்காய்கள் வில்லேஜ் விஞ்ஞானி 🌳🌳கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் இலாலாப்பேட்டையில் வசித்து வரும் திரு.விஜயகுமார் என்பவர் உடற்பயிற்சியுடன் நீர் இறைக்கும் இயந்திரத்தினை வடிவமைத்து அசத்தி வருகிறார். 🌹🌹அவரிடம் கேட்டபோது நான் ஒரு அரசுப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். 🌹🌹இந்த சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் எளிய கருவிகளை உருவாக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. 🌹🌹அதன் சிறு முயற்சியே இந்த  கருவியின் உருவாக்கம் ஆகும். 🌹🌹இந்த கருவியின் சிறப்பம்சம் என்னவென்றால் நாம் உடற்பயிற்சி செய்து கொண்டே நம் வீட்டிற்கு தேவையான நீரினை நிலத்தடியிலிருந்து மேலே கொண்டு வரலாம். 🌹🌹மின்சாரம் இல்லாத சமயங்களில் இந்த இயந்திரத்தை பயன்படுத்தி எங்கள் வீட்டிற்கு தேவையான நீரினை நிலத்தடியிலிருந்து எடுத்துக் கொள்கிறோம். 🌹🌹அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்யும் நேரத்தில் 2000 லி நீரை இந்த இயந்திரம் மேலே கொண்டு வந்துவிடுகிறது. 🌹🌹ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பார்கள் ஆனால் , இது ஒரே கல்லில் ஐந்து உடற்பயிற்சி, மின்சார சிக்கனம், நீர் மேலாண்மை, சூழல் பாதுகாப்பு, உடல் ஆரோக்கியம் என்று...

சிறப்பு பட்டிமன்றம்

Image
சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு காரணம் - ஆண்களா ? பெண்களா ? கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் புனவாசிப்பட்டி அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்றம் 28/04/2019 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பட்டிமன்ற நடுவர் புனவை கவிஞர் திரு.பழனியப்பன் ஆசிரியர் ... ஆண்களே என்ற அணியில் திரு.செந்தில்  ஆசிரியர் அவர்களும் மற்றும்  திரு.மகேந்திரன் ஆசிரியர் அவர்களும்  ... பெண்களே என்ற அணியில் பேராசிரியர் நித்யா அவர்களும் புதுமை விரும்பி இரா.கோபிநாதன் ஆசிரியர்  அவர்களும் பேசினார். இந்நிகழ்ச்சியினை ஊர் நாட்டாமை N.M.தர்மராஜ் அவர்கள் தொடங்கி வைத்தார். ஊர் காரியக்காரர் திரு.நடேசன், ஊர் முக்கிய பிரமுகர்கள்திரு.வேலாயுதம் திரு.கருப்பாபிள்ளை மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியை காண திரளான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர் . விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர் .

குதிரை குலுக்குதல் தேர்த்திருவிழா

Image
              இது நம்ம ஊரு செய்தி குதிரை குலுக்குதல் தேர்த்திருவிழா கரூர் மாவட்டம் , கிருஷ்ணராயபுரம் ஒன்றியம்,  புனவாசிப்பட்டி அருள்மிகு மகாமாரியம்மன் திருக்கோயில் தேர்த்திருவிழா 19/04/2019 அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவிரி ஆற்றிற்கு குதிரையுடன் சென்று தீர்த்த குடம், பால்குடம் எடுத்து வந்தனர். 21/04/2019 ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் தேர்நத்தம் சென்று அம்மனுக்கு கரகம் பாலித்தல் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான குதிரை குலுக்குதல் நிகழ்ச்சி இரவு ஒரு மணி அளவில் நடைபெற்றது. இரவை வண்ணமயமாக்கிய வானவேடிக்கை நிகழ்சியும் ,மாவிளக்கு பூசையும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 22/04/2019 திங்கட்கிழமை அக்னி சட்டி, அலகு குத்துதல் , பொங்கல் வைத்தல், படுகளம், சூளாடு சரங்குத்துதல் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 23/04/2019 செவ்வாய்க்கிழமை கிடா வெட்டுதல் மா விளக்கு கம்பம் விடுதல் மஞ்சள் நீராடல் நடைபெற உள்ளது.