ஒரே கல்லில் ஐந்து மாங்காய்கள்
ஒரே கல்லில் ஐந்து மாங்காய்கள்
வில்லேஜ் விஞ்ஞானி
🌳🌳கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் இலாலாப்பேட்டையில் வசித்து வரும் திரு.விஜயகுமார் என்பவர் உடற்பயிற்சியுடன் நீர் இறைக்கும் இயந்திரத்தினை வடிவமைத்து அசத்தி வருகிறார்.
🌹🌹அவரிடம் கேட்டபோது நான் ஒரு அரசுப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்.
🌹🌹இந்த சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் எளிய கருவிகளை உருவாக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.
🌹🌹அதன் சிறு முயற்சியே இந்த கருவியின் உருவாக்கம் ஆகும்.
🌹🌹இந்த கருவியின் சிறப்பம்சம் என்னவென்றால் நாம் உடற்பயிற்சி செய்து கொண்டே நம் வீட்டிற்கு தேவையான நீரினை நிலத்தடியிலிருந்து மேலே கொண்டு வரலாம்.
🌹🌹மின்சாரம் இல்லாத சமயங்களில் இந்த இயந்திரத்தை பயன்படுத்தி எங்கள் வீட்டிற்கு தேவையான நீரினை நிலத்தடியிலிருந்து எடுத்துக் கொள்கிறோம்.
🌹🌹அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்யும் நேரத்தில் 2000 லி நீரை இந்த இயந்திரம் மேலே கொண்டு வந்துவிடுகிறது.
🌹🌹ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பார்கள் ஆனால் , இது ஒரே கல்லில் ஐந்து உடற்பயிற்சி, மின்சார சிக்கனம், நீர் மேலாண்மை, சூழல் பாதுகாப்பு, உடல் ஆரோக்கியம் என்று உற்சாகத்துடன் கூறுகின்றனர்.
🚀இவரின் இந்த வடிவமைப்பு இயந்திரத்தை தங்கள் பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டி டெல்லி வரை சென்று தங்கப்பதக்கம் பெற்றது என்று மனமகிழ்வுடன் கூறினார்.
🛴🛴இது போன்ற செயல்பாடுகளை ஊக்குவிப்போம் நாமும் சூழலுக்கு உகந்த இயந்திரங்களை பயன்படுத்தி உலகை காப்போம் !

Comments
Post a Comment